உறுதிமொழிகளில் மாற்றமில்லை என்கிறார் மைத்திரி!

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் நாட்டுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அரச திணைக்களங்கள் மற்றும் பதவிநிலைகளில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பட்டார்.

ஊடகங்களின், பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன், ஜனாதிபதி மாளிக்கையில் நேற்றுக் காலை நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின், பொருளாதாரம் நிலையான பாதையில் தடம்பதித்துள்ளது. இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையினை மாற்றியுள்ளோம். வெளிநாட்டு சொத்து பெறுமதி 5 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.

இது, இன்னும் இரண்டொரு உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொலன்னாவை, மீத்தொட்டமுல்ல குப்பைமலை சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு, பொறுப்பு கூறவேண்டியது அதனுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களுக்கும் உரியதாகும். அதிகாரத்துக்கும் உரிமைக்கும் இடையிலான கயிறு இழுத்தல் காரணமாகவே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீதொட்டமுல்ல விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் நியமிக்கப்படுவார். அவரிடமிருந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை எதிர்பார்க்கப்படும். அவ்வறிக்கையில் குறிப்பிடப்படும் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !