Main Menu

உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் – அமெரிக்கா நம்பிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால்  முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில்கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தமது உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் கூடுகின்ற நிலையில்,  அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார மீட்சியை கட்டியெழுப்புவதற்கும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்குமான தமது உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்துடனும் புதிய நாடாளுமன்றத்துடனும் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares