உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவாக்சின் தடுப்பூசி -ஆய்வு முடிவு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வு இதழில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும், கொரோனா வைரசானது தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது.
அவ்வகையில், இந்திய தயாரிப்பான கோவாக்சின் கொரோனா தடுப்பூசியானது, இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் உட்பட பல வகையான உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூறியிருந்தது.