உயிர் தீயாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 300 பேரளவில் மருத்துமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த மேலும் ஒரு தரப்பினரின் இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதேநேரம், கடந்த தினம் தெமட்டகொடை – மஹவில பகுதியில் உள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தச் சென்றபோது, இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பலியான 3 காவல்துறையினரின் இறுதிச் சடங்குகளும் இன்று இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், உயிரிழந்த மூவரில் ஒருவர் காவல்துறை பரிசோதகராகவும், ஏனைய இருவரும் காவல்துறை அலுவலர்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.