உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்ப ஒரு சிலர் முனைகின்றனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை குழப்புவதற்கு ஒரு சிலர் முனைவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அமரபுற பீடத்தின் தலைவர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக
கொழும்பு பேராயர் நேற்று (22) அங்கு சென்றிருந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.