Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டோர் – செல்வந்த குடும்பங்களை சேர்ந்த பட்டப்படிப்பாளர்கள்

உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 தற்கொலை குண்டுதாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த தற்கொலை குண்டுதாரிகளின் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரியும் இடம்பெற்றுள்ளார். இவர் தெமட்டகொடையில் உயிரிழந்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகள் அனைவரும் இலங்கையர்கள். 

சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரையில் 60 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 32 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளருடனான சந்திப்பின் போது வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இராஜாங்க அமைச்சர் பதில் அளிக்ககையில் தற்கொலை குண்டுதாரிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றும் உயர் கற்கை நெறிகளை முடித்தவர்கள்.

ஒருவர் பிரிட்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொண்டவர். என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே வெளிநாட்டு உளவு பிரிவுகள் தகவல் வழங்கியிருந்தனர்.

அது தொடர்பில் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டது. இவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஜனாதிபதி எதிர்வரும் சில தினங்களில் பாதுகாப்பு பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி அறிவித்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தாக்குதலை மேற்கொண்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கும் வெளிநாட்டு அமைப்புக்களுக்கிடையிலான தொடர்புகளில் தற்பொழுது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பிலும் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

tt

விசாரணைகளுக்கு அமெரிக்காவின் உளவு பிரிவான FBI இன் உதவி பெறப்பட்டுள்ளதா? இதற்கு பதிலளித்த அமைச்சர் அமெரிக்கா அவுஸ்திரேலியா பிரிட்டன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி வழங்கி வருகின்றன என்றும் தெரிவித்தார்.

தாக்குதல்களை நடத்தியவர்கள் பயிற்சிகளை எங்கு பெற்றனர் இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதால் அது குறித்து விபரங்களை வெளியிடுவது தற்பொழுது சிரமம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.