உயிர்த்தெழுந்தார் உலக பிதா – இன்று ஈஸ்டர் திருநாள்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் இன்று ஈஸ்டர் திருநாள் உலகெங்கிலும் உள்ள கிறீஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு நம்ப முடியாத அற்புதமாக விளங்குகிறது. மரியாள் என்னும் கன்னி பெண்ணின் வயிற்றில் பிறந்தார்.

தமது 30 வயதில் யோவான் என்ற ஞானியிடம்ஞானஸ்நானம் பெற்ற பின், கடவுளின்
மைந்தனாக அவரது திருப்பணிக்கு தன்னை அர்ப்பணித்தார். 12 சீடர்களுடன் சமூகத் தொண்டு செய்தார். தன்னை கடவுளின் மைந்தர் என்றதாலும், அற்புதமும், அதிசயங்களும் செய்ததாலும், இவர் மீது மதகுருக்கள் பொறாமை கொண்டனர்.

ஆலயத்தில் நடக்கும்தவறுகளை, இயேசு கடுமை யாக எதிர்த்தார். எல்லாமக்களிடமும் அன்பு காட்டினார். இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்த நிகழ்ச்சி யும், பார்வையற்றவருக்கு கண்பார்வை வழங்கியதும், ஒரு பெண்ணை ஆசை இச்சை யோடு பார்க்கிற எவனும் அவளுடன் விபச்சாரம்செய்தாயிற்று என்று கூறி பாவச் செயல்களை கடுமை யாக எதிர்த்ததும் மக்களை கவர்ந்தன. அநீதியான காரியங்களை கடுமையாக விமர்சித்தார்.

யூத மக்கள், கடவுளின் மைந்தனான இயேசு,அரண்மனையில் உயர்ந்த நிலையில் பிறப்பார் என எண்ணியிருந்தனர். ஆனால், அவரோ மாட்டுக்கொட்டிலில் பிறந்தார், தன்னைக் கடவுளின் குமாரன் என்று கூறியதால் மத குருக்கள் இவரைக் கொலை செய்ய சதி செய்தனர்.

இயேசு தன்னைக் கடவுளின் மகன் என்றும், “என்னைகண்டவன் பிதாவைக்கண்டவன். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,” என்று உபதேசம் செய்து வந்தார்.

“நான் மரித்த பின்மீண்டும் உயிர்த்தெழுவேன்,” என்று அவர் கூறினார்.அதுபோல, அவர் மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இந்த நிகழ்ச்சியைக் கண்ட சீடர்கள், இவரே கடவுள் என்று உலகம் முழுவதும் பிரசங்கம் செய்தனர். அவர் உயிர்த்ெதழுந்த நாளே, ஈஸ்டர் திருநாளாகக்
கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் பெயர்க்காரணம்

வடக்கு ஜெர்மனியில் வசித்த பழங்குடியினர் ‘ஈஸ்டர்’ என்னும் பெண் தெய்வத்தை வழி
பட்டனர். சூரிய உதயத்தின் தெய்வமான இவளது பெயரால் கிழக்கு திசைக்கு, ஆங்கிலத்தில் ‘ஈஸ்ட்’ என பெயர் வந்தது. வானில் மறைந்த சூரியன், கிழக்கில் உதிப்பது போல, சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இந்த நிகழ்வின்
அடிப்படையில், உயிர்த் தெழுந்த நாளுக்கு, ‘ஈஸ்டர்’ என்னும் பெயர் சூட்டினர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !