Main Menu

உயிரே உனக்கு மூன்றுவரி

உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்…!

காதல் பூவுக்குள்  தேன்போலவும்  …
கண்ணுக்குள்  கண்ணீராகவும் ….
இருப்பதால் தான் சுகமும் வலியும்….!!!

நினைவுகள் தாங்க முடியாமல் …
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா …?

இறக்கும் நாள் தெரியும் …
உன்னை மறக்கும் நாளே…
நான் இறக்கும் நாள் ….!!!

உருவம் தெரியாத உயிருக்கு ….
உயிர் கொடுத்து பிரசவிப்பது….
உண்மை காதல் …..!!!

கவிப்புயல் இனியவன்