உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு
நேற்றையதினம் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழைமரம் நட்டு வெள்ளைக் கொடி கட்டி இவ்வாறு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் பிரதேசதங்களில் வர்த்தாக நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகளும் இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து நடைபெற்ற போதிலும் பொதுக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதாகவும் வீதிகளில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது