உயி­ரியல் தீவி­ர­வாதத் தாக்­கு­தல் ; 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்­ச­ரிக்கை

உயி­ரியல் தீவி­ர­வாத தாக்­கு­த­லொன்றால்  உல­கி­லுள்ள 30  மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழக்கக் கூடிய அபாயம் உள்­ள­தா­கவும் அந்தத் தாக்­கு­த­லா­னது அணு ஆயுதத் தாக்­கு­த­லொன்றை விடவும் பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது எனவும் மைக்ரோ சொப்ட் ஸ்தாப­னத்தின் ஸ்தாப­கரும் உலகின் மிகப் பெரிய செல்­வந்­த­ரு­மான  பில் கேட்ஸ் தெரி­வித்தார்.

த ரெலி­கிராப் ஊட­கத்­திற்கு அளித்த விசேட பேட்­டியின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தீவி­ர­வா­திகள்  உல­க­ளா­விய ரீதியில் அழிவை ஏற்­ப­டுத்தும் முக­மாக பெரி­யம்மை போன்ற நோய்த் தடுப்பு முறைமை இல்­லாத நோய்­களை மீள உரு­வாக்­கலாம் எனவும் இத்­த­கைய உயி­ரியல் தீவி­ர­வாதத் தாக்­கு­தலால் உல­கெங்கும் கொள்ளை நோய்கள் வேக­மாக பரவி பெரு­ம­ள­வா­னோரை பலி­கொள்ளும் அபாயம் உள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

மேற்­படி தாக்­குதல் மூலம் ஒரு வருட காலத்­திலும் குறைந்த காலப் பகு­தியில் 30  மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகக் கூடிய அபாயம் உள்­ள­தாக தெரி­வித்த பில் கேட்ஸ், உல­க­ளா­விய பய­ணங்கள் கார­ண­மாக அந்தத் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்கும்  நிலை உள்­ள­தாக எச்­ச­ரித்தார்.

1919  ஆம் ஆண்டு ஸ்பெயினில் 100  மில்­லியன் பேர் பலி­யா­வ­தற்கு கார­ண­மாக அமைந்த கொள்ளை நோயை விடவும் மோசமான விளைவை இந்த உயிரியல் தீவிரவாதத் தாக்குதலால் ஏற்படுத்தக் கூடியது என அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !