உயர் நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி! – சமந்தா பவர்

நாடாளுமன்றை கலைத்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்” என ஐ.நாவிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிக் கொள்ளவுள்ளதாக வெளியான தகவலையடுத்தே சமந்தா பவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இலங்கை மக்கள் சுதந்திரமான ஊடகங்கள் சிவில் சமூகம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தான் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !