உத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி டிடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று (புதன்கிழமை) கலை வேகமாக பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து காரணமாக பஸ்ஸில் சிக்குண்டிருந்த பயணிகளை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதேவேளை விபத்தில் 17 சம்பவ இட்த்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !