உணவகத்தின் மீது வேகமாக வந்து மோதிய லொறி! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சுவிற்சர்லாந்தில் உள்ள உணவகத்தின் வாசலில் உள்ள புல்தோட்டத்தில் வேகமாக வந்த லொறி மோதியது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவிற்சர்லாந்தின் Ballwil நகராட்சியில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நேற்று காலையில் வாடிக்கையாளர்கள் தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் வேகமாக வந்த லொறி ஒன்று அந்த உணவகத்தின் வாசலில் இருந்த புல் தோட்டத்தின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய சத்தத்தை கேட்டு உணவகத்தின் உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்த சம்பவத்தில் யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் லொறிக்கும், மோதிய அந்த இடத்திலும் கணிசமான சேதாரம் ஏற்பட்டுள்ளது.

லொறி ஏன் உணவகத்தின் மீது மோதியது என்பது குறித்த விவரத்தை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !