உணர்ச்சி மிக்க பிரியா விடையுடன் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார் அஞ்செலா மெர்க்கல்

ஜேர்மனியத் தலைவர் அஞ்செலா மெர்க்கல் 18 வருடங்களின் பின்னர் உணர்ச்சிமிக்க பிரியாவிடையுடன் கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமது கட்சியின் தாராளவாதக் கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென அவரது உரையின்போது அஞ்செலா மெர்க்கல் கேட்டுக்கொண்டார்.

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளபோதிலும் அவரது ஆட்சிக்காலம் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும்வரை ஜனாதிபதி பதவியில் இருப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer), ப்ரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz), ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர்.

விரைவில் கட்சியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !