உடன்பாடற்ற பிரெக்ஸிற் அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்!

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு பிரித்தானிய பாராளுமன்றம் பிரதமர் தெரேசா மே-க்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் இந்தப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் காணப்படும் ஐரிஷ் எல்லைக்கான காப்பீட்டுக் கொள்கையை அகற்றுவதற்கான பிரித்தானிய பாராளுமன்றத்தின் பரிந்துரைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ள காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் நிருபர்களிடம் பேசிய ஒஸ்ட்ரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கரின் நெய்ஸ்ல் தெரிவித்துள்ளார்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்க்கும் நோக்குடன் பிரெக்சிற்றுக்கான காலக்கெடுவை நீடிப்பதற்கு பிரித்தானியா விரும்பினால் அதற்கு அயர்லாந்து ஆதரவளிக்குமென ஐரிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெலன் மெக்என்டீ தெரிவித்துள்ளார்.

அதே போன்று பிரெக்ஸிற் ஒப்பந்தம் ஒன்றை எட்டும் வரை பிரெக்சிற்றை பிற்போடுவதற்கு போர்த்துக்கல் ஆதரவு வழங்குமென அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வா தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !