பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம்

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உடனடியாக பாரளுமன்றை கூட்டுமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்;துள்ளது.  மேலும் பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுட்  (Heather Nauert ) இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமாவதனால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !