உங்கள் கையில் உள்ள திருமண ரேகை உங்கள் திருமணம் பற்றி என்ன சொல்கின்றது? அறிய ஆவலா?

உங்கள் கையின் சிறிய விரலின் அடிப்பாகத்துக்கும், இருதய ரேகைக்கும் இடையில் காணப்படும் கோடு திருமண ரேகை ஆகும்.

பல கோடுகள் காணப்படின், அவற்றில் நீண்ட கோட்டை கருத்தில் எடுக்கவும்.

மேலுள்ள எட்டு வகையான திருமண ரேகைகளுள் உங்களின் ரேகையை ஒப்பிடவும்.

ஆண்கள் வலக் கையையும், பெண்கள் இடக் கையையும் கருத்தில் எடுக்கவும்.

marriage-lines-types

 

01.திருமண ரேகையானது இருதய ரேகைக்கு அண்மையாக அமைந்திருப்பின்

marriage-line-astro001

திருமண ரேகையானது இருதய ரேகைக்கு அண்மையாக அமைந்திருப்பின் இது உங்களுக்கு இளவயதில் திருமணம் இடம்பெறுவதை குறிக்கின்றது. 20 வயதுக்கு அண்மித்த வயதுகளில் திருமணம் இடம்பெறாம்.

02. திருமண ரேகையானது சிறிய விரலின் அடிப்பகுதிக்கு அண்மையில் அமைந்திருப்பின்

marriage-line-astro002

திருமண ரேகையானது சிறிய விரலின் அடிப்பகுதிக்கு அண்மையில் அமைந்திருப்பின் உங்களுக்கு காலம் தாழ்த்தி திருமணம் இடம்பெறும் என்பதை குறிக்கின்றது. எனினும் நீங்கள் இளவயதிலேயே உங்கள் துணை யார் என்பதை அறிந்துவிடுவீர்கள். 35 – 50 வயது காலப்பகுதியில் திருமணம் இடம்பெறக் கூடும்.

03. திருமண ரேகையானது இருதய ரேகைக்கும், சிறிய விரலின் அடிப்பகுதிக்கும் சரி நடுவில் அமைந்திருப்பின் –

marriage-line-astro003

திருமண ரேகையானது இருதய ரேகைக்கும், சிறிய விரலின் அடிப்பகுதிக்கும் சரி நடுவில் அமைந்திருப்பின் நடுத்தர வயதில் திருமணம் இடம்பெறும். குறிப்பாக 30 வயதை அண்மித்த காலப் பகுதியில் திருமணம் இடம்பெறலாம்.

04. ஒன்றுக்கு மேற்பட்ட திருமண ரேகைகள் காணப்படின்

marriage-line-astro004

பல திருமண ரேகைகள் காணப்படின், அது உங்களுக்கு எதிர்பால் நண்பர்கள் அதிகம் இருப்பதை குறிக்கின்றது. அதிலே உயரமான ரேகையை திருமண ரேகையாக எடுத்துக் கொள்ளலாம்.

05. மிகவும் நீளமான ஒற்றைக் கோடு

marriage-line-astro005

மிகவும் நீளமான ஒற்றைக் கோடு காணப்படின் நீங்கள் ஒருவர் மீதே முழு அன்பையும் காட்டுவீர்கள். உங்கள் திருமண வாழ்வானது மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படும். அத்துடன் உங்களை சுற்ரியுல்ளவர்களின் அன்புக்கும் பாத்திரமானவராக இருப்பீர்கள்.

06. திருமண ரேகைக்கு அருகிலோ, திருமண ரேகையுடன் இணைந்ததாகவோ நட்சத்திரக் குறியீடு காணப்படின்

marriage-line-astro006

திருமண ரேகைக்கு அருகிலோ, திருமண ரேகையுடன் இணைந்ததாகவோ நட்சத்திரக் குறியீடு காணப்படின் நீங்கள் எதிர்பாலரை அதிகமாக கவருவீர்கள். காதல் திருமணம் செய்யும் யோகமும் காணப்படும்.

07. திருமண ரேகையானது மேல் நோக்கி வளைந்திருப்பின்

marriage-line-astro007

திருமண ரேகையானது மேல் நோக்கி வளைந்திருப்பின் நீங்கள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பீர்கள். அத்துடன் உங்களுக்கு பிடித்தவரை வாழ்க்கைத்துணை ஆக்கி மகிழ்வான வாழ்வு வாழ்வீர்கள்

08. திருமண ரேகையானது கீழ் நோக்கி வளைந்திருப்பின்

marriage-line-astro008

திருமண ரேகையானது கீழ் நோக்கி வளைந்திருப்பின் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதில் மிக்க எச்சரிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்களின் வேலைப்பழு காரணமாக மனைவியுடன் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் மனைவியுடன் மனம்விட்டு கதைப்பது அவசியமானதாகும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !