உக்ரைன் ஜனாதிபதி ஜேர்மனுக்கு விஜயம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜேர்மனியின் பெர்லின் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக ஜேர்மனியின் ஆதரவைப் பெறுவதே தமது விஜயத்தின் நோக்கம் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக, புனித பிரான்சிஸைச் சந்திக்க இத்தாலி சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யாவினால் கடத்தப்பட்ட உக்ரைன் சிறுவர்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.
இதேநேரம் இத்தாலி பிரதமரையும் சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.