ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக வர வேண்டாம் – வத்திக்கான் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டாளர்கள் இல்லாமலேயே இந்த ஆண்டு அதன் பாரம்பரிய ஈஸ்டர் வார பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக இத்தாலியில் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு 21 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிகனின் புகழ்பெற்ற தேவாலயம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
கடந்த வாரம் அங்குள்ள சிற்றாலயத்தில் பாப்பரசர் தனியாகவே பிரார்த்தனை நடத்தியதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இதுவரை இல்லாத ஒரு வரலாற்று சம்பவமாக ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.