ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை – பி.பாரதிராஜா

ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை என, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பி.பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே, ஈழ மக்களின் உண்மைக் கதையை திரைப்படமாக எடுத்தால், இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு இந்திய தணிக்கை குழு அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றைக்கு தமிழன் தன்மானத்தோடு நிற்கின்றானோ அன்றைக்கு நாம் நினைப்பதை உறுதிப்பூர்வமாக சொல்ல முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !