ஈழத்துப்பாடகர் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் வணக்கநிகழ்வு!

கடந்த 26 – 02 – 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ்.ஜி.சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community Houseமண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின் தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில்மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா சீவராசா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.

அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் மலர்வணக்கம்செலுத்தினார்கள்.

மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.அகவணக்கத்தையடுத்து தலைமையுரையை திரு வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார்.

அவர் தனது தலைமையுரையில் ஈழத்துப்பாடகர் எஸ். ஜி. சாந்தன் அவர்கள் “இந்தமண்எங்களின் சொந்தமண்…” என்ற பாடலில் தொடங்கி போரின் இறுதிக்காலம் வரையிலும்நூற்றுக்கணக்கான பாடல்களைப்பாடி எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தனது இசையால் வலுச்சேர்த்தவரென்றும் எமது ஆயுதப்போராட்டம் தீவீரமடைந்திருந்தகாலப்பகுதிகளில் புதிய போராளிகளை உள்வாங்குகின்ற பரப்புரைப்பணிகளைமுன்னெடுத்திருந்த சந்தர்ப்பங்களிலும் சாந்தன் அவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதுஎன்றும் குறிப்பிட்டார்.

அதனையடுத்து எஸ். ஜி. சாந்தன்அவர்கள் மாவீரர்களுக்காகப் பாடிய பாடலான” கண்ணுக்குள்ளே வைத்துக்காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்….” என்ற பாடலை வளர்ந்துவரும் இளைய பாடகர் செல்வன் சஜிந்தன் அவர்கள் உணர்வுபூர்வமாகப் பாடினார்.

அதனையடுத்து நினைவுரையினை திரு கொற்றவன் அவர்கள் நிகழ்த்தினார். அவர்தனதுரையில் ஈழத்துப்பாடகர் சாந்தன் அவர்களின் இசைப்பயணம் தொடர்பாகவும்காலத்திற்கேற்ற வகையில் அவரால் பாடப்பட்ட சில பாடல்களையும் தொட்டுக்காட்டியதோடு மேலும் அவரது மகனும் பாடகரும் மாவீரருமாகிய கப்டன் இசையரசன் 2000-ம் ஆண்டுகாலப்பகுதியில் தாயக விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பரப்புரைச்செயற்பாடுகளின்போதும் போராளிகள் மட்டத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளின்போதும் தனதுதந்தையார் பாடிய பாடல்களைப் பாடியே இசையுலகில் பிரவேசித்து பின்னர்இசைத்தட்டுகளுக்கும் பலபாடலகளையும் பாடியிருந்தார்.

மேலும் ஈழப்பாடகர் சாந்தன்அவர்கள் யுத்தம் முடிவுற்ற தருணத்தில் அரசபடையினரிடம்சரணடைந்து படையினரால் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் தடுப்புமுகாமில்தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகியிருந்தார்.

அவர் விடுதலையாகி வந்த பின்னரும் தாயகத்திலுள்ள பல இந்துஆலயங்களுக்கும் பக்திப்பாடல்களைப்பாடியிருந்ததோடு 2013-ம் ஆண்டு வடமாகாணசபைத் தேர்தலின்போது “எங்கும்தமிழே புறப்படு தமிழினமே….” என்ற பாடலைப்பாடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோகவெற்றிக்கு தனது இசையால் வலுச்சேர்த்தவர் என்றும் பாடகர் எஸ். ஜி. சாந்தன் அவர்களின்இழப்பு எமது கலைத்துறைக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும் என்றும் தனது நினைவுரையில்குறிப்பிட்டார்.

சில நெருக்கடியான தருணங்களில் அழுத்தங்களின் மத்தியில் செயற்பட்டபோதும் சாதுரியமாகதமிழர் தேசியத்தை விட்டுக்கொடுக்காமல் செயற்பட்ட காலங்களையும் அவர்நினைவுகூர்ந்தார்.

இறுதியாக மாலை 5.20 இற்கு வணக்கநிகழ்வு நிறைவுபெற்றது.

s-g-santhan-tribute-2017_melb-05s-g-santhan-tribute-2017_melb-06s-g-santhan-tribute-2017_melb-07s-g-santhan-tribute-2017_melb-08s-g-santhan-tribute-2017_melb-04






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !