ஈரான் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகள் ஆரம்பம்

ஈரானில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் 80 மில்லியன் மக்கள் தொகையில் 56 மில்லியன் பேர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் பலரும் மாலையே வாக்களிப்பர் என்ற நிலையில் வாக்குச் சாவடிகள் இன்று மாலை 6 மணியுடன் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அடுத்த 24 மணிநேரத்திற்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி மற்றும் கடும்போக்கு இஸ்லாமிய மதுகுருவான இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலேயே கடுமையான போட்டி நிலவுகின்றது.

இத்தகைய போட்டிகளுக்கு மத்தியில் அதிகரித்துவரும் அரசியல் பதற்றங்களை கையாள்வதற்காக பாதுகாப்பு படையினர் பலரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !