ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி!
இலங்கையில் நேற்று ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நள்ளிரவு 12 மணிக்கு, ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.