Main Menu

ஈஃபிள் கோபுர மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க தீர்மானம்

ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க பரிஸ் நகரசபை தீர்மானித்துள்ளது.

பரிஸ் நகரசபை இது தொடர்பாக தெரிவிக்கையில், இதுவரை நள்ளிரவு 1 மணிக்கு அணைக்கப்பட்டு வந்த ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள், இனிமேல் இரவு 11.45 மணியுடன் அணைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. 1 மணி வரை இருந்த பார்வையாளர்கள் நேரத்தை 11.45 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் எரிசக்திக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இக்குளிர் காலத்துக்கு தேவையான மின்சாரம் மற்றும் எரிவாயுவினை சேமிக்க அரசு போராடி வருகிறது. இதற்காக பலதரப்பட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அதன் ஒரு பகுதியாகவே ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகளையும் குறித்த நேரத்திற்கு முன்பாக அணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தால் ஈஃபிள் கோபுரத்தின் ஒரு வருடத்துக்கான மின்சார செலவில் 4% வீதத்தினை சேமிக்க முடியும் என Société d’exploitation de la Tour Eiffel (SETE) அறிவித்துள்ளது.