Main Menu

இஸ்ரேலில் பாரிய காட்டுத் தீ : பெரும்பகுதி நிலப்பரப்பு நாசம்

இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய கட்டுத் தீயால் பெரும்பகுதி நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு அருகில் மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் பரவத் தொடங்கிய காட்டுத்தீயானது வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமாா் 20 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.

தற்போது தீ வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், காற்று அவ்வப்போது திசை மாறி வீசுவதால் அணைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தீ பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். தீயணைப்பு நடவடிக்கையில் சுமார் 10 தீயணைப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

இந்தக் காட்டுத் தீயில் குடியிருப்பு வீடுகள் எதுவும் சேதமடையவில்லை என்றாலும், பூங்காக்கள் போன்ற பொது இடங்களைத் தவிா்க்க வேண்டும் எனவும், பொதுவெளியில் தீ மூட்டி சமைக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இந்தக் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இத்தாலி, குரோஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், உக்ரைன், ருமேனியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு விமானங்களை அனுப்பியுள்ளன.

இதேவேளை, இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயில் 12,000 ஏக்கா் நிலப்பரப்பு நாசமானதுடன் 44 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares