இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பரிஸ் போக்குவரத்தில் 1,500 திருடர்கள் கைது

பரிஸ் போக்குவரத்துக்களில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து 1,500 ‘பிக் பொகட்’ திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோடை கால விடுமுறையில், நிரம்பி வழியும் தொடரூந்து நிலைய சுரங்களில் இவர்கள் இலகுவாக பல உடமைகளை திருடிச் சென்றுவிடுகிறார்கள். தொலைபேசிகள், பண பைகள் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையர்கள் திருடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தினமும் பதிவாகின்றது. முன்னர் தெரிவித்ததன் படி, சாதாரண உடைகளில் காவல்துறையினர் தொடரூந்து நிலையங்கள் மற்றும் சுரங்கங்களில் மற்றும் தொடரூந்துகளில் மக்களோடு மக்களாக பயணிக்கின்றனர். திருடர்களை இலகுவாக அடையாளம் காண முடியாது எனவும், அவர்கள் பல்வேறு வடிவங்களில் நடமாடுகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு திருடர்களை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதுவரை 1,500 திருடர்களை பொது போக்குவரத்து சேவைகளில் மாத்திரம் கைது செய்துள்ளனர்.
கடந்த வருடத்தில் மொத்தமாக 2,130 ‘பிக் பொக்கட்’ திருடகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேவேளை, இவ்வருடம் பரிசில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களிலும் காவல்துறையினர் சாதார உடைகளில் திருடர்களை கண்காணித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !