இளவரசியின் வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையகம்!

தாய்லாந்துப் பொதுத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட தீர்மானித்திருந்த இளவரசி உபோல்ரத்னாயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தாய்லாந்து இளவரசி உபோல்ரத்னாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இதன்காரணமாக அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் அரசியல் பதவிகளை வகிக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி தாய்லாந்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப்புரட்சிக்கு பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !