இல்-து-பிரான்சின் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்

இன்று திங்கட்கிழமை இல்-து-பிரான்சின் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடபட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட்டர் விடுமுறை முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் உள்வரும் வீதிகள் அனைத்தும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது. இன்று 14 மணியில் இருந்து 19 மணிவரை வீதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக A10 வீதியில்,  Saint-Arnoult சுங்கச்சாவடியில் இருந்து போர்க்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும், A6 வீதியில், Fleury சுங்கச்சாவடியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
A7, A16, A8, A9, A61 ஆகிய நெடுஞ்சாலைகளும் சாலைகளும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !