Main Menu

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கலாசாராத்தில் புதிய திருப்பம் ஆரம்பமாகி உள்ளது – ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கலாசாரத்தில் புதிய திருப்பம் ஆரம்பமாகியுள்ளது. இனி ஒருபோதும் எவருக்கும் இந்த அரசியல் கலாசாரத்தை பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது.மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கை சிதைப்பதற்கு இடமளிக்காமல் அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கி பயணிக்க உள்ளோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பேருவளை கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கலாசாராத்தில் புதிய திருப்பம் ஆரம்பமாகியுள்ளது.இதனை வேறு எவராலும் செய்ய முடியுமா? இதனை வேறு எவராவது செய்வார்களா? அதனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மாத்திரமே செய்ய முடியும்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பினையும் எங்களால் மாத்திரமே நிறைவேற்ற முடியும்.

அதனை நாம் செய்து காட்டியுள்ளோம்.இனி ஒருபோதும் இந்த நாட்டின் அரசியல் கலசாரத்தை பழைய பாதைக்கு அழைத்து செல்வார்கள் என நாம் நினைக்கவில்லை.இது ஒரு புதிய ஆரம்பமாகும். புதிய மாற்றத்துக்காக நாட்டை அழைத்து செல்லும் பயணமாகும்.

பொருளாதாரத்தில் வீழ்ந்த நாட்டையே மக்கள் எமக்கு கையளித்தனர். மக்களால் நிம்மதியாக வாழ முடியாத, போதுமான அளவு வங்குரோத்து அடைந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்.நாம் செய்ய முடியாது எனக்கூறவில்லை.நாம் பொறுப்பேற்கும் போது அதன் பாரதூரத்தை நாம் அறிந்திருந்தோம்.பொருளாதாரத்தின் உள்ளே பாரிய நெருக்கடிகள் உள்ளன.

இந்த வருடத்தில் செலவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது? நாம் அரசாங்கத்தின் செலவுகளை குறைத்துள்ளோம்.குறைந்த செலவுகளுடன் கூடிய பட்டியல் கொண்ட வரவு செலவுத்திட்டத்தை நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிப்போம்.

ஜனாதிபதிகளுக்குரிய வரவு செலவுத்திட்டத்தில் பாரிய அளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்கும் போது அதற்காக புள்ளிவிவரங்களுடன் அதனை நான் முன்வைப்பேன். அமைச்சுக்களின் செலவுகளையும் குறைத்துள்ளோம்.

ஜனாதிபதியாகிய எனக்கு நிதி அமைச்சராக நிதி செலவிட முடியும்.டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக நிதி ஒதுக்கி செலவு செய்ய முடியும்.இந்த மூன்று அமைச்சுக்களையும் தனிநபராக நானே நிர்வகிக்கிறேன்.எனினும் நான் எனக்குரிய இந்த அமைச்சுக்களின் செலவுகளை முழுமையாக நீக்கியுள்ளேன்.

நாம் நெருக்கடியில் உள்ளோம்.நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.அனைத்து பக்கங்களிலும் இருந்து நாம் சில அர்பணிப்புகளை செய்ய வேண்டும்.ஆனாலும் நாட்டு மக்களை கவனிக்க வேண்டும். மக்களை நெருக்கடிக்குள் தள்ள முடியாது.அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

நாடு என்ற வகையில் மீண்டும் மீண்டெழும் யுகத்தில் இருக்கிறோம்.ஆனால் இதனை பார்த்து சிலர் திணறுகிறார்கள்.

எதையாவது ஒன்றை கூறிக்கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.அதனை எவரும் பொருட்படுத்த வேண்டாம். அவர்கள் திணறுவார்கள்.அழுவார்கள்.புலம்புவார்கள்.

இந்த நாட்டை புதிய அபிவிருத்தி பாதையில் அழைத்துச் செல்லும் அரசியல் கலாசார யுகமே தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கி பயணிக்க உள்ளோம் என்றார்.

பகிரவும்...
0Shares