இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் – மங்கள

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமையால், மார்ச் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை இணை அனுசரணை வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றியபோது மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தாம் நடைமுறைப்படுத்தியபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு எதிராகச் செயற்பட்டதாகவும் குறிப்பாக தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது செயற்பாடுகளால் இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் அதிருப்தி அதிகரித்துள்ளது. இவ்வாண்டு இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இன்னமும் அதிகரிக்கும். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என்றும் மங்கள தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !