இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
2020 ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை ஒத்தி வைக்க இரு கிரிகெட் சபையும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T-20 சர்வதேச போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.