இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் கமல் குணரத்ன ஆஜர்
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கவே அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன இன்று காலை 10.30 மணியளவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.