இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்கவும் கவனம் செலுத்தவும் அனைத்து தரப்பினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண வழிவகை செய்து இயல்பு நிலைக்குத் திரும்புவது அனைத்துக் கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் சனத்தொகைக்கான தனது ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கான தெரிவுகளை மதிப்பீடு செய்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.