இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஆதரவு தொடரும்: ஜப்பான் உறுதி

அரசியல் நெருக்கடிகளின் எதிரொலியாக வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தரப்படுத்துவதற்கான தமது ஒத்துழைப்பு தொடரும் என ஜப்பான் உறுதியளித்துள்ளது.

ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியமா வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் வரக்காகொட ஞானரத்தன தேரர்  மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

அதன் பின்னர் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தும் மிக நீண்டகால பங்காளனாக ஜப்பான் விளங்கி வருகிறது. ஜப்பானின் இந்த பங்களிப்பு தொடரும்.

இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை மேலும் வலுப்படுத்தவும் ஜப்பான் எதிர்பார்த்துள்ளது” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !