இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை: லெபனான் அரசு
இலங்கை பணியாளர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனையை மேற்கொள்ள லெபனான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன மற்றும் லெபனான் தொழில் அமைச்சர் லமினா யமினி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடு திரும்பும் முன்னர் லெபனான் தொழில் அமைச்சுடன் இணைப்பை மேற்கொண்டு, PCR சோதனையை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் PCR பரிசோதனை தொடர்பான தரவுகளை பகிர்ந்துகொள்வதற்காக பெய்ரூத் நகரிலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் 24 மணித்தியாலமும் சேவை வழங்கக்கூடிய தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பகிரவும்...