இலங்கை பணிப்பெண் சவுதியில் சுட்டுக் கொலை

இலங்கை பணிப்பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரியங்கா ஜெயசங்கர் எனும் 42 வயதான இலங்கை பணிப்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சவுதி அரேபிய பிரஜை, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் பணிபுரிந்த வீட்டிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா பொலிஸாரை மேற்கோள்காட்டி, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சடலம் அல் ராஸ்கி வைத்தியசாலையில் வைக்கப்ப்டடுள்ளதாக சவுதி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

30 வயதான சந்தேகநபர், மனநோயாளியொருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !