இலங்கை சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசு பேருந்து சுவிஸில் விபத்து!

இலங்கை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்தொன்று சுவிஸ் நெடுஞ்சாலையில் விபத்திற்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் மற்றும் ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று இரு டிரக் வண்டிகளுடன் மோதியதில் நேற்று (புதன்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொகுசு பேருந்தின் சாரதியும், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பெண வழிகாட்டியும், மீட்பு பணியாளர்களின் உதவியுடனேயே மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் நிலையே கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்திற்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !