இலங்கை சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் – கடற்படை தளபதி சந்திப்பு

இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திருமதி கிளரி மெட்ரவுட் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவை சந்தித்தார்.

கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் திருமதி மெட்ரவுட் கடற்படைத் தளபதிக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !