இலங்கை – உலக வங்கிக்கிடையில் இரு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கைக்கும் உலக வங்கிக்குமுடையில் நேற்றைய தினம் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை. இரு உடன்படிக்கைகளும் 15 கோடி டொலர் பெறுமதியானவை என உலக வங்கி அறிவித்துள்ளது.
நேற்று வொஷிங்டனில் இடம்பெற்ற நிகழ்வில் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான துணைத்தலைவர் ஹாட்விக் ஷாபர், Hartwig Schafer, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க ஆகியோர் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.