இலங்கை இளைஞன் பிரித்தானியாவில் வெட்டிக் கொலை

பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கொலை இடம்பெற்ற இடத்தில் தற்போது ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கான  காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !