இலங்கையை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்எலிசபத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அன்ரிச் நொர்டே 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் 190 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 32.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக குவின்டன் டி கொக் 51 ஓட்டங்களையும், டூ பிளெஸ்ஸிஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக இசுறு உதான தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி 4-0 என கைப்பற்றியுள்ளது. 5 ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி கேப் டவுன் மைதானத்தின் நடைபெறவுள்ளது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !