Main Menu

இலங்கையில் வத்திக்கான் ஆட்சியா நடக்கிறது- சிவசேனை கேள்வி

இலங்கையில் தற்போது வத்திக்கான் ஆட்சியா நடக்கிறதென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் ஒழுங்கானதொரு ஆட்சி நடைபெறவில்லை. அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என கத்தோலிக்க முதல்நிலை குருவான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் தெரிவித்திருந்தார். இது ஒரு கொடுமையான கூற்றாகும்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் கத்தோலிக்க மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி கேட்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் போப்பாண்டவரின் ஆணையை நிறைவேற்றும் கர்தினால், இலங்கை அரசை விமர்சிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...