இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம்- அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா நோய் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா நோய் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதை பின்பற்ற வேண்டும்.
மேலும் இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், மன்றங்கள், விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் தொலை தூர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர கால உதவிகளை வழங்க குறைவான வளங்களே இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் 3 ஓட்டல்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அதில் வெளிநாட்டவர்கள் உட்பட 267 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...