இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐ.நாவிற்கு விளக்கம்
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சமுக மற்றும் பொருளாதார பேரவைக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதன் அமைச்சர்கள் மட்ட மாநாடு நியுயோர்க்கில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் கலந்து கொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
குறிப்பாக ஒரு லட்சம் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்டர்ப்ரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டம் குறித்தும் அவர் விளக்கமளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் சமமானதும், நிலையானதுமான அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் குறித்த விபரங்களையும் அவர் பேரவைக்கு வழங்கியுள்ளார்.