Main Menu

இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சி

2024 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 3 முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டி தெரிவித்துள்ளது. அதன்படி, விவசாய நடவடிக்கை 1.7 சதவீதமும், கைத்தொழில் நடவடிக்கை 10.9 சதவீதமும், சேவை நடவடிக்கைகள் 2.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன