இலங்கையின் கொரோனா பாதிப்பு 200,000ஐ கடந்தது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.
நாட்டில் இன்று மேலும் இரண்டாயிரத்து 280 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஆயிரத்து 534ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 851 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 132பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 656ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 33ஆயிரத்து 746 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 19இலட்சத்து 20 ஆயிரத்து 801 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 53ஆயிரத்து 894 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.