இலங்கைக்குத் திரும்ப முற்பட்ட இரு அகதிகள் கைது

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோர காவற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் கண்ணாடிப்படகில் இருவர் பயணிப்பதை அவதானித்த காவற்படையினர், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதன்போது, சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்புகுமரன்  என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற குறித்த இருவரும், மதுரை ஆனையூர் முகாமில் தங்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடலோர காவற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !