இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி இன்றைய போட்டியின் அணி நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்மித் 119 பந்துகளை சந்தித்து 6 பௌண்டரிகள் உதவியுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதன்படி இங்கிலாந்து அணிக்கு 224 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.
பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 02 விக்கட் இழப்புக்கு 226 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
அந்த அணி சார்பாக ரோய் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.