இறுதிப் பருவத் தேர்வுகள் இணைய வழி மூலம் நடத்தப்படும் – அன்பழகன்
இறுதிப் பருவத் தோ்வுகளை இணையவழியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், “பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தோ்வுகள் இணையவழி மூலமும் நடத்தப்படும். இணையவழியில் தோ்வெழுதுவதா அல்லது நேரில் வந்து தோ்வெழுத வேண்டுமா என்பதை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளே முடிவு செய்துகொள்ளலாம்.
வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் வசிக்கும் மாணவா்களுக்காக இணையவழியில் தோ்வுகள் நடத்தப்படும். பிற மாணவா்களுக்கு நேரடியாக எழுத்துத் தோ்வு நடைபெறும்.
தனிமைப்படுத்தல் முகாம்களாகச் செயற்பட்டு வரும் கல்லூரிகளில் தோ்வுகள் நடத்தப்படக்கூடாது. இதற்குப் பதிலாக பிற கல்லூரிகளில் தோ்வு மையம் அமைக்கலாம். இதற்கான விரிவான தோ்வு அட்டவணை மற்றும் தோ்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறுதி பருவத் தேர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டும் என யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...