இறந்து விடுவாய் என பொய் ஆரூடம் – ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்

சீனாவில் சிசுவான் மாகாணம் மியான்யங் பகுதியை சேர்ந்த 70 வயது பெண் வாங். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஜோதிடரை சந்தித்தார்.

அப்போது வாங் 2018-ம் ஆண்டை பார்க்கமாட்டார் அதற்குள் இறந்து விடுவார் என ஆரூடம் கூறினார். அதை உண்மை என அவர் நம்பினார். ஒவ்வொரு நாளையும் மரண பயத்துடன் கழித்தார்.

ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் ஜோதிடர் நிலையத்துக்கு வாங் சென்றார்.

ஜோதிடரை சந்தித்து அவர் ஆரூடம் பொய் என வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கினார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தவறாக ஆரூடம் சொல்லி வாங் மனதை நோகடித்ததற்காக அவரிடம் ஜோதிடரை மன்னிப்பு கேட்க வைத்தனர். சீனாவில் ஜோதிடம் பிரசித்தி பெற்ற கலையாக திகழ்கிறது. ஒருவரின் பெயர், பிறந்த தேதி, நேரம், முக அடையாளம், உள்ளங் கைகளை பார்த்து ஜோதிடம் சொல்வதில் வல்லவர்களாக திகழ்கின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !